மேலோட்டப் பார்வை
நோக்கு பணி |
தேயிலை சிறு தோட்ட சொந்தக்காரர் அதிகாரசபை 1977 பெப்ருவரி 1ஆம் திகதி தேயிலை சிறுதோட்ட அபிவிருத்தி 1975 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க சட்டத்தால் நிறுவப்பட்டது. 1997 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க 1991 ஆம் ஆண்டு 36 ஆம் இலக்க சட்டமானது இதனை நிறுவி தேயிலை சிறு சொந்தக்காரர் சமூகங்களை பதிவு செய்ததுடன், 1997 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க சட்டமானது இச் சமூகங்களுக்கு சட்ட அந்தஸ்தை அளித்ததுடன் அதனைத் தொடர்ந்து சட்ட ரீதியானதாக்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு 34 ஆம் இலக்க சட்டமானது அடிப்படைச் சட்டத்தில் சட்டங்களை சேர்த்துக்கொண்டு சட்டரீதியானது.
நாட்டிலே சிறு தேயிலை தோட்டங்களின் அபிவிருத்திக்கான உரிமையாளர் ஆணை வழங்கிய ஒரேயொரு நியாதிக்க அமைப்பு என்ற வகையில் இது உற்பத்தியையும் சந்தைப்படுத்தல் செயற்பாடுகளையும் அதிகரித்ததுடன் முன்னேற்றத் திறனை முன்னேற்றியதுடன் சிறு தேயிலை தோட்டக்காரர் நலனுக்காக பணியாற்றுவதுமே இந் நிறுவனத்தின் இலக்குகளாக உள்ளன.
சேவை வழங்கும் கட்டமைப்பில் அடிமட்டத்திலுள்ள ஆகக் குறைந்த அலகாக இருப்பது தேயிலைப் பரிசோதகர்/ விஸ்தரிப்பு உத்தியோகத்தர் வீச்சில் உள்ளது ஆகும். 147 அவ்வகையான வீச்சுக்கள் தேயிலை வளரும் பகுதிகளில் தற்பொழுது செயற்படுத்தப்படுவதுடன் 8 பிராந்தியங்களிலுமுள்ள 26 உப அலுலவகங்களிலும் உள்ள உப அலுவலகக் கட்டமைப்பால் உடனடியாக மேற்பார்வை செய்யப்படுகிறது. தேசிய மட்டத்திலே இப் பிராந்தியங்களானவை தலைமை அலுவலகத்தினால் வழிநடத்தப்படுவதுடன் மேற்பார்வைக்கும் உட்படுத்தப்படுகின்றன.
தேயிலை சிறு தோட்ட சொந்தக்காரர் அபிவிருத்தி சனசமூகம் முறைமையானது பெருமளவில் நிறுவனத்தினாலே அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு சேவை வழங்குவதில் பெரிதும் உதவுகிறது. இச் சமூக முறைமையானது ஒத்த அதிகாரப்படியமைப்பைக் கொண்டிருப்பதுடன் நிறுவனத்திற்கு சமாந்தரமாகவும் செயற்படுகிறது.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( புதன்கிழமை, 26 ஜூலை 2017 04:58 )