நிறுவனத்தின் தலையீடுகளின் காரணமாக எதிர்பார்க்கப்படும் தாக்கமானது தேயிலை சிறுதோட்ட சொந்தக்காரர்களின் ஜீவனோபாயத்தை முன்னேற்றுவதாகும். இந் நிறுவனத் தொழிற்பாடுகளை மூன்று பெரிய விடயப்பரப்புக்களில் செயற்படச் செய்வதும் ஆகும்.
1. விஸ்தரிப்புத் தலையீடுகள்

செயற்பாட்டுத்திறன் மற்றும் உற்பத்தி என்பவற்றை முன்னேற்றுவதற்கும் அடிப்படை இலக்குடன் விஸ்தரிப்புச் சேவைகளானவை பயிற்றப்பட்ட விஸ்தரிப்பு உத்தியோகத்தர்களால் அடிமட்டத்தில் வழங்கப்படுகிறது.

2. காணி அபிவிருத்தி தலையீடுகள்

சிறு தோட்ட சொந்தக்காரர்களின் உற்பத்திறனை முன்னேற்றும் அடிப்படை இலக்குடன் பல வடிவங்களிலான ஊக்குவிப்புத் திட்டங்கள் காணி அபிவிருத்திக்குத் தேவையான நிதிகள், மானிய அடிப்படையில் வழங்கப்படும் இடங்களில் செயற்படுத்தப்படுகிறது. இச் செயற்பாடுகள் பிரதானமாக தேயிலைக் காணிகளை மீள நடுவது மற்றும் இடைநடுதல் எனபவற்றிலே பிரதானமாகக் கொண்டுள்ளது. இறப்பர் தேயிலைகளை மாற்றி இடையே நடுவது என்பதும் ஆதரவளிக்கப்படுகிறது.

3. சமூக அபிவிருத்தி தலையீடுகள்

தேயிலை சிறுதோட்ட சனசமூகமானது தேயிலை சிறு தோட்டச் சொந்தக்கார அபிவிருத்திச்சபைகளாக  ஒழுங்கமைக்கப்படுகிறது. இந்த அடிமட்ட சனசமூக அடிப்படையிலான நிறுவனங்களானவை நிறுவனங்களின் சேவை வழங்குகைகளுக்கு  வசதி செய்கின்றன. அத்துடன் சிறுதோட்டச் சொந்தக்காரர்கள் கூட்டு பேரம்பேசல் ஊடாக கைத்தொழிலுக்குள்ளே உயர்ந்த பட்ச  நன்மைகளை அறுவடை செய்வதற்காக வலுவூட்டப்படுகின்றன.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( வியாழக்கிழமை, 04 ஆகஸ்ட் 2011 05:51 )